ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்த பிரபல தமிழ் நடிகர்..! 

 
1

2014-ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…இன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தை பற்றி ஒருவர் புகழ்ந்து இருக்கின்றார்..

நடிகர் தனுஷ் அவர்கள் இப்படத்தை பாராட்டி இப்போது ட்வீட் போட்டு படத்தின் எதிர்பார்ப்பை அதிகபடுத்தி இருக்கின்றார்.எக்ஸ் தளத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் , "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் பார்த்தேன். இது கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. ராகவா லாரன்ஸின் சிறந்த நடிப்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் பிரமிப்பான நடிப்பை பார்ப்பது தொடர்கதையாகிவிட்டது. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. கடைசி 40 நிமிடம் உங்கள் இதயத்த இதயத்தை கொள்ளைக்கொள்ளும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.


 

From Around the web