பிரபல தமிழ் நடிகை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்..!!
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களான வள்ளி செட்டி பவனி மற்றும் இரு ஆண் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி அதிகாலையில் காரில் வந்துள்ளார். காரை யாஷிகா ஆனந்த் அதிவேகமாக ஓட்டி வந்ததால் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் சாலையோர தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெள்ளி சட்டி பவனி உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகை யாஷிகாவிற்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மார்ச் 27 ஆம் தேதி ஆஜராகி உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினார். தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி அவரை வரும் ஜூலை 27ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டார்