பிரபல தமிழ் நடிகையின் நிலை கவலைக்கிடம்..!
தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், அருந்ததியின் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தினால் அவரது குடும்பம் தவித்து வருவதாகவும், அவருக்கு உதவ பிரபலங்கள் யாரும் முன் வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது அருந்ததி நாயரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அருந்ததியின் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் வீதம் செலவாதாகவும், இதுவரை சுமார் 40 லட்சத்திற்கு மேல் செலவாகி உள்ளதாகவும் அருந்ததியின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அருந்ததியின் சகோதரர் தற்போது விபத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டு குணமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெளியான சைத்தான், கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை தான் அருந்ததி நாயர்.
 - cini express.jpg)