புதிய கார் ஒன்றை வாங்கிய பிரபல சீரியல் நடிகை!

 
1

 பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்தவர் நக்ஷத்ரா நாகேஷ்.

இதில் இவரது கதாபாத்திரம் பலரது மனதையும் வென்றது. இதனால் வெகுவான ரசிகர்களை கவர்ந்தார் நக்ஷத்ரா நாகேஷ். அதிலும், இந்த சீரியலில் நக்ஷத்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்த பிரபல தொகுப்பாளர் தீபக் இணை பெரிதளவில் ரசிகர்களைக் கவர்ந்தது எனலாம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழும் சரஸ்வதியும் சீரியல் முடிவடைந்தது. இருப்பினும், இந்த சீரியலின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, நக்ஷத்ரா நாகேஷ், வாயை மூடி பேசவும், சேட்டை, இரும்பு குதிரை, மிஸ்டர் லோக்கல் மற்றும் ஹே சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தான், நக்ஷத்ரா நாகேஷ் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இவ்வாறு தான் வாங்கிய ஹோண்டா எலிபேட் காருடன் நக்ஷத்ரா எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நக்ஷத்ராவின் விடாமுயற்சிக்கும், உழைப்புக்கும் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web