பிக் பாஸில் கலந்து கொள்ள போகும் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை...!
Sep 18, 2023, 17:20 IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
இதில் போட்டியாளராக யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்பது குறித்த லிஸ்ட் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் கடைசியில் போட்டியாளராக இணைந்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம்.
ஆமாம் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ரவீனா தான் அது என தெரிய வந்துள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.