பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் தற்கொலை…அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

 
1

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியல் இந்த கால இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் கல்லூரி கதை அம்சத்துடன் இருப்பதால், இளைஞர்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் வெண்ணிலா – சூர்யா காதல் காட்சிகள் இணையத்தில் பயங்கர ஹிட்..

1

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவின் தோழனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹரி. இவர் நேற்று சென்னையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சின்னத்திரை வட்டாரத்தில் ஹரியின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web