பிரபல இளம் இசைக் கலைஞர் லிடியன் தற்போது பிரபல நடிகரின் படத்திற்கு இசையமைப்பாளர்..!
Feb 4, 2024, 09:05 IST
ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள மோகன்லால் தற்போது ‘பாரோஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் 3டி எனப்படும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவாகிறது.
லிஜொ புன்னோஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா’ஸ் டிரெசர்’ என்ற நாவலைத் தழுவி இப்படத்தை உருவாக்குகிறார் மோகன்லால்.இந்தப் படத்துக்குத்தான் லிடியன் இசையமைக்கிறார். இத்தகவலை ‘பாரோஸ்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டிலேயே இந்தப் படம் குறித்த தகவல்களை வெளியிட்டார் மோகன்லால். எனினும் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக தாமதமாகி, இப்போதுதான் படத்தின் பணிகள் எல்லாம் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
 - cini express.jpg)