பிக்பாஸில் களமிறங்கும் மியா கலிஃபா- தயாராகுங்கள் ரசிகர்களே..!!

விரைவில் இந்தியாவில் துவங்கவுள்ள பிக்பாஸ் புதிய சீசனில் ஆபாச பட துறையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் மியா கலீஃபா போட்டியாளராக பங்கேற்கிறார்.
 
mia khalifa

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பிரதர். இதை இந்தியாவில் தயாரிக்கப்படும் போது பிக்பாஸ் என்று குறிப்பிடப்பட்டது. முதன்முதலில் இந்தியில் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது, நாட்டின் பிரதானமான அனைத்து மாநில மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதனுடைய டிவி நிகழ்ச்சிகள் பிரபலமானதை தொடர்ந்து, பிக்பாஸ் ஓ.டி.டி வடிவத்திலும் தயாரானது. அதை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். விரைவில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் புதிய சீசன் தயாராகவுள்ளது.

அதேபோன்று இந்தி மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓ.டி.டி திரைக்காக தயாரிக்கப்படுகிறது. முந்தைய பிக்பாஸ் ஓ.டி.டி நிகழ்ச்சியை கரண் ஜோஹர் தொகுத்தி வழங்கினார். ஆனால் இம்முறை ஒளிபரப்பாகும் சீசனை சல்மான் கான் தொகுத்து வழங்கவுள்ளார். இவர் தான் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

biggboss OTT

தற்போது இந்தி பிக்பாஸ் ஓ.டி.டி நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களுடன் துவங்கப்படுகிறது.  இதற்கான ஷூட்டிங் மும்பை ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அவினாஷ் சச்தேவ், அகன்ஷா பூரி, ஆலியா, பேபிகா துர்வே, பலக் நாஸ், ஜியா சங்கர், மனிஷா ராணி, பாலக் பர்ஸ்வானி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோன்று வைல்டு கார்டு எண்ட்ரியில் முன்னாள் ஆபாச நடிகை மியா கலீபா மற்றும் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பாளர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி பிக்பாஸ் ஓ.டி.டி நிகழ்ச்சியில் ஜியோ சினிமா ஓ.டி.டி-யில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதை ஆன்லைனில் இலவசமாகப் பார்க்கலாம் மற்றும் 24X7 நேரலை ஸ்ட்ரீமிங்கிலும் பார்க்கலாம்.

From Around the web