மீண்டும் தள்ளிப்போனது ஆர்.ஆர்.ஆர் பட ரிலீஸ்..!

 
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்  சரண் இருவரும் சேர்ந்து நடித்துள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர போராட்டத்தின் போது ஆந்திராவில் நடந்த புரட்சியாக சொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் ’ரணம் ரவுத்திரம் ரத்தம்’. ஆர்.ஆர்.ஆர் என்று சுருக்கமாக சொல்லப்படும் இந்த படத்தில் ஆலியா பட் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
ரூ. 450 கோடி மதிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அதன்படி வரும் அக்டோபர் 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அக்டோபரில் முடிவடைந்துவிடும். அதனால் இந்த படத்தின் வெளியீடு மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால்  புதிய ரிலீஸ் தேதியை தற்போது அறிவிக்க முடியாது. உலக சினிமா சந்தைகள் இயங்கும் போது கூடிய விரைவில் தேதியை வெளியிடுவோம்” என்று படக்குழு ட்விட்டரில் அறிவித்துள்ளது.

From Around the web