படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பவர் ஸ்டார்... மருத்துவமனையில் அனுமதி!!

 
1

ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சீனிவாசன் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘லத்திகா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்துக்கு பிறகு பவர் ஸ்டாருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கடைசியாக கேப்மாரி என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தையடுத்து தற்போது வனிதா விஜயகுமாருடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதுகு வலியின் காரணமாகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி பவர் ஸ்டார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

From Around the web