தொடர் சிகிச்சையில் ’பவர்ஸ்டார்’ சீனிவாசன்..!

 
பவர்ஸ்டார் சீனிவாசன்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர்ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் விபரம் தெரியவந்துள்ளது.

ஹீரோவாக நடித்து பிறகு காமெடியனாக மாறியவர் பவர்ஸ்டார் சீனிவாசன். தற்போது ‘பிக்கப் டிராப்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அப்போது திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதனால் தான் அவர் மயங்கி விழுந்ததாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நடிகர் சீனிவாசனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் நலம்பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web