பிரபாஸை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்! 

 
1

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நேற்று முன்தினம் நிலவில் தரையிறங்கியது. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு மிகப் பெருமையான தருணமாக இது அமைந்தது. அதாவது, நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த நான்காவது நாடாகவும் இந்தியா இந்த சாதனையைப் படைத்துள்ளது. இதனையடுத்து சந்திரயான் 3 வெற்றியை இந்திய மக்கள் கொண்டாடித் தீர்த்தனர்.​​​

அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல துறையினரும் இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட பட்ஜெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தத் திட்டத்துக்காக 615 கோடி என சொல்லப்படுகிறது. இதனை ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட்டுடன் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

ஓம் ரவத் இயக்கிய இந்தப் படத்தில் பிரபாஸுடன் கீர்த்தி சனோன், சயிப் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராமாயணத்தை பின்னணியாக வைத்து அனிமேஷனில் உருவான ஆதிபுருஷ் பான் இந்தியா படமாக வெளியானது. அதிக எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதாவது ஆதிபுருஷ் படத்தின் பட்ஜெட் 700 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் படம் மொத்தமே 400 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆதிபுருஷ், சுமார் 300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

இதனை குறிப்பிட்டு மீம்ஸ் போட்டுள்ள நெட்டிசன்கள், ஆதிபுருஷ் பட்ஜெட்டுக்கு இன்னொரு சந்திரயானை விண்கலத்திற்கு அனுப்பியிருக்கலாம் என கூறி வருகின்றனர். ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது முதலே அதன் பட்ஜெட், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. பாகுபலி படத்திற்குப் பின்னர் பிரபாஸின் படங்கள் எதுவுமே ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ஆதிபுருஷ் திரைப்படமும் இடம்பெற்ற நிலையில், இந்த சந்திரயான் 3 மீம்ஸை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

From Around the web