கொரோனா தொற்று அச்சுறுத்தல்- தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்..!

 
கொரோனா தொற்று அச்சுறுத்தல்- தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்..!

நடிகர் பிரபாஸின் தனிப்பட்ட ஒப்பனை கலைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கு அடையாளமாக மாறிவிட்டார் பிரபாஸ். அவருடைய நடிப்பில் ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் போன்ற படங்கள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதுதவிர நடிகையர் திலகம் பட இயக்குநர் இயக்கும் அடுத்த படத்தில் தீபிகா படுகோனுடன் நடிக்கிறார் பிரபாஸ்.

இந்நிலையில் அவருடைய தனிப்பட்ட மேக்-அப் மேனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் பிரபாஸ்.

இதனால் அவர் நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராதே ஷ்யாம் படம் இந்தாண்டுக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் அந்த படத்தை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

From Around the web