கீர்த்தி சனோன் உடன் சேர்ந்து திருமண அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்..!!
திருப்பதியில் நடந்த ஆதிபுருஷ் படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சனோன் உடன் மேடையேறிய பிரபாஸ் திருமணம் குறித்து அறிவித்ததற்கு ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
Jun 7, 2023, 18:41 IST

இந்தியளவில் ஆதிபுருஷ் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வரும் 16-ம் தேதி வெளியாகும் இந்த படத்துக்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. இதில் இயக்குநர் ஓம் பிரகாஷ், நடிகர் பிரபாஸ், கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்நிகழ்வில் பேசிய பிரபாஸிடம் ரசிகர்கள் பலர் திருமணம் குறித்து கூச்சலிட்டு கேட்டனர். உடனே சிரித்துவிட்ட பிரபாஸ் எனது திருமணம் இந்த திருப்பதியில் தான் நடக்கும் என்று கூறினார். இதை கேட்டதும் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சனோன், நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதனால் அவருடன் மேடையில் தோன்றிய பிரபாஸிடம் ரசிகர்கள் கூச்சலிட்டு திருமணம் குறித்து கேட்டுள்ளனர்.