எல்லாமே உன்னிடம் இருந்தும், நீ அசுரன் தான்- ஆதிபுருஷ் டிரெய்லர்..!!

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மட்டும் வைத்து ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘ஆதிபுருஷ்’. இந்த படத்தில் பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்தாண்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.
ஆனால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள டிரெய்லரில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தொடர்பான காட்சிகளில் முன்னேற்றத்தை பார்க்க முடிகிறது. ஆனால் பிரபாஸின் தோற்றம் மிகவும் செயற்கையாக உள்ளது. அதற்கு அவரன் திடீரென குண்டானது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதன்காரணமாக கம்யூட்டர் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் பிரபாஸின் உருவத்தை படக்குழு மாற்றியுள்ளது. பாலிவுட்டில் ஏற்பட்டுள்ள கதை பஞ்சம் இயக்குநர்களை மீண்டும் ராமாயண கதைகளை தேடி ஓட வைத்துள்ளது.
இந்த படம் ஜூன் 16-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகிறது. தற்போது படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளதை அடுத்து, படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.