முதல்முறையாக ஓ.டி.டி-க்கு வரும் பிரபுதேவா..!

 
பொன் மாணிக்கவேல்

தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும், பாலிவுட் சினிமாவில் இயக்குநராகவும் தடம் பதித்துவிட்ட பிரபுதேவா முதன்முறையாக ஓ.டி.டி-யில் களமிறங்கவுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கோயில் சிலை திருட்டு வழக்குகளை விசாரணை அதிகாரியாக இருந்தவர் பொன் மாணிக்கவேல். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில் அவருடைய நடவடிக்கை தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இவருடைய பெயரை வைத்து பொன் மாணிக்கவேல் என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஏ.சி. முகில் செல்லப்பன். முதன்முறையாக இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சுரேஷ் சந்திர மேனன், மஹேந்திரன், சூரி, பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ளார், கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்ட இந்த படம், கடந்த வருடம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. தற்போது நேரடியாக ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ’பொன் மாணிக்கவேல்’ நவம்பர் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன் மாணிக்கவேல் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தாலும், சிலைக்கடத்தல் சம்மந்தப்பட்ட எந்த காட்சிகளும், வசனங்களும் வரவில்லை என படத்தின் டிரெய்லரை பார்க்கும் போதே புரிந்துகொள்ள முடிகிறது.
 

From Around the web