கன்னட சினிமாவில் கால்பதிக்கும் பிரபுதேவா..!

 
புனித் ராஜ்குமார் மற்றும் பிரபுதேவா

நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா தன்னுடைய தம்பிக்காக கன்னட சினிமாவில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரு மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் பிரபுதேவா. இவரும், இவருடைய மூத்த சகோதரர் இருவரும் சென்னையில் இருக்கின்றனர். ஆனால் பிரபுதேவாவின் தந்தையும், அவருடைய தம்பியுமான நாகேந்திர பிரசாத் மைசூருவில் வசிக்கின்றனர்.

தன்னுடைய மூத்த சகோதரர்கள் போலவே தற்போது நாகேந்திர பிரசாத் ஒரு படம் இயக்கி வருகிறார். கன்னடத்தில் உருவாகும் அந்த படத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த பாடலுக்கு அவரே கொரியோகிராஃபி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. கன்னட சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

From Around the web