குழந்தைகளை மகிழ்விக்கும் பூதமாக கலக்கும் பிரபுதேவா‘மைடியர் பூதம்’ டிரெய்லர் வெளியீடு..!!
Dec 25, 2021, 13:21 IST

நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது இயக்குனராகவும் நடிகராகவும் சிறந்த படங்களைக் கொடுத்து வருகிறார். தற்போது மஞ்சப்பை, கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கத்தல் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் ‘மை டியர் பூதம்’. காமெடி மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் மற்றும் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.