நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில்... அதுவும் இவருக்கு ஜோடியாக..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த வேதிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். அவரது புதிய படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
 
 
vedhika

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா. அதை தொடர்ந்து சக்கரகட்டி, பரதேசி போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 

இவருடைய நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் ‘காஞ்சனா- 3’. அதற்கு பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் டாக் ஷோக்களில் பங்கேற்று வந்தார். ஆனால் படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் பிரபுதேவா அடுத்து நடிக்கும் படத்தில் வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘பேட்ட ரப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே. சீனு என்பவர் இயக்கும் இந்த படத்தை ஜோபி பி. ஷான் தயாரிக்கிறார். பிரபு தேவாவின் நடிப்பில் வெளிவந்த காதலன் படத்தில் இடம்பெறும் பேட்ட ராப் பாடலின் தலைப்பையே, படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர்.


இந்த படத்தில் பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, மைம் கோபி, ரியாஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் வரும் 15ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.


 

From Around the web