அடுத்தடுத்து நான்கு தமிழ் படங்களில் ஹீரோவாக நடிக்கும் பிரபுதேவா..!

 
பிரபு ஹேவா

பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் பிரபுதேவா, தமிழில் அடுத்தடுத்து கதாநாயகனாக நடிப்பதற்கு நான்கு படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

இந்தி சினிமாவில் படங்களை இயக்குவதில் தீவிரம் காட்டினாலும், தமிழ் படங்களில் நடிப்பதையும் கைவிடவில்லை நடிகர் பிரபுதேவா. அந்த வகையில் அவர் நடித்துள்ள ‘யங் மங் சங்’, ‘பொன்மாணிக்கவேல், ’பஹீரா’ போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

இதில் பொன்மாணிக்கவேல் படம் மட்டும் ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்கள் திரையரங்குகள் திறக்கப்பட்டதற்கு பிறகு ரிலீஸ் குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா, ‘பிளாஷ்பேக்’, ‘மை டியர் பூதம்’ உள்ளிட்ட பெயரிடப்படாத இன்னும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நான்கு படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி. பிள்ளை என்பவர் தயாரிக்கிறார்.

அதன்படி பிளாஷ்பேக் என்கிற படத்தை டான் சாண்டி என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மகாபலிபுரம், கொரில்லா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் மஞ்சப்பை படம் மூலம் கவனமீர்த்த ராகவன் அடுத்து இயக்கும் படம் ‘மை டியர் பூதம்’ இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர ஏற்கனவே குலேபகாவலி படத்தில் பணியாற்றிய கல்யாண் இயக்கும் படத்தில் பிரபுதேவா நடிக்கிறார்.

இதுதவிர அறிமுக இயக்குனர் அமல் கே.ஜோபி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகி உள்ளார். தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருவதால், மீண்டும் தனது சொந்த ஊரான சென்னைக்கு குடிபெயரும் திட்டத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா. மேலும் தன்னுடைய மகன்கள் வசிக்கும் இடத்துக்கு அருகாமையில் வீடு பார்க்கவும் 
அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

From Around the web