நயன்தாராவை மோசமாக விமர்சித்த பிரபுதேவாவின் முதல் மனைவி.!

 
1

பிரபு தேவாவின் முன்னாள் மனைவி லதா, நயன்தாரா தொடர்பில்  கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.. 

அதாவது நயன்தாராவும் பிரபுதேவாவும் காதலித்த நேரத்தில் பிரபுதேவாவின் முன்னாள் மனைவி லதா தனது கணவரை மீட்பதற்கான போராட்டத்தில் இறங்கி இருந்தார். அதன்பின்பு ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதலும் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது வெளியான தகவல்களில், 2009 ஆம் ஆண்டு நயன்தாரா பிரபுதேவாவின் காதல் பற்றி பல கிசுகிசு தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அது ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. காரணம் அந்த ஆண்டில் வெளியான வில்லு படத்திற்கான ப்ரோமோஷன் ஆக கூட கருதப்பட்டது.

இதை தொடர்ந்து 2010ஆம் ஆண்டில் பிரபுதேவா ஒரு அறிக்கை அதிரடியாக வெளியிட்டார். அதில் தான் கடந்த இரண்டு வருடமாக நயன்தாராவை டேட்டிங் செய்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதை அடுத்து நயன்தாராவுடன் உள்ள உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் லதா. மேலும் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் மிரட்டி இருந்தார். லதாவுக்கு பல மகளிர் அமைப்புகள் ஆதரவாக களமிறங்கின. லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்படும் நயன்தாராவின் போஸ்டர்களும் எரிக்கப்பட்டது.

எனினும் 2010 ஆம் ஆண்டு ஜூலையில் பிரபு தேவா லதாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம். ஆனாலும் பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான உறவும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. நயன்தாராவையும்  விரைவிலேயே பிரிந்தார்.

தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது போல பிரபுதேவாவும் 2020 ஆம் ஆண்டு டாக்டர் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது..

From Around the web