நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகும் பிரபுதேவாவின் போலீஸ் படம்..!

 
நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகும் பிரபுதேவாவின் போலீஸ் படம்..!

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொன். மாணிக்கவேல்’ படத்தை நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேமிசந்த் தயாரிப்பில் ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள படம் ‘பொன். மாணிக்கவேல்’. இதில் நடிகர் பிரபுதேவா முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது. அந்த டிரெய்லரில் மிகவும் கண்டிப்பான, அதே சமயத்தில் அதிக தோரணையுடன் கூடிய போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா நடித்திருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த படத்தில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் இதுவரை வெளியாகவில்லை.

பல்வேறு பெரிய படங்களின் வெளியீடு, கொரோனா முதல் அலை, கொரோனா இரண்டாவது அலை என திரையுலகிற்கு பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் நிலமையை சமாளிக்க பொன் மாணிக்கவேல் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார், மேலும் கே.ஜி. வெங்கடேஷ் என்பவர் இசையமைத்துள்ளார். அதிரடி கமர்ஷியல் படமாக தயாராகியுள்ள பொன் மாணிக்கவேல் ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web