பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி யாரென்று தெரிந்தது- இதோ வீடியோ..!!

நடிகர் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி குறித்து எந்தவிதமான தகவலும் தெரியாமல் இருந்த நிலையில், அவர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தோன்றி பேசியுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
 
prahu deva

சினிமா துறையில் நடிகர், திரைப்பட இயக்குநர், நடன இயக்குநர் என பன்முகத் திறமையுடன் வலம் வருபவர் பிரபுதேவா. கடந்த 1995-ம் ஆண்டு, சினிமாவில் தன்னுடன் குரூப் டான்ஸ் ஆடி வந்த ரம்லத் என்பவரை பிரபுதேவா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 2008-ம் ஆண்டு இந்த தம்பதியின் மூத்த மகன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டான். அப்போது பிரபுதேவா வில்லு படத்தை இயக்கி வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு நடிகை நயன்தாராவுடன் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியதை அடுத்து, இருவரும் சென்னையில் சேர்ந்து வாழத் துவங்கினர்.

அதற்கு பிரபுதேவாவின் அப்போதைய மனைவி ரம்லத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 
பிரபுதேவா நடிகை நயன்தாராவை திருமணம் செய்தால், உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறினார். பல்வேறு மகளிர் அமைப்புகளும் நயன்தாராவுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தன.

இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பிரபுதேவா, நயன்தாராவுடனான உறவை முறித்துக்கொண்டார். அதேசமயத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ரம்லத்தையும் அவர் விவகாரத்து செய்தார். இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு திருப்பதியில் வைத்து ஹிமானி சிங் என்பவரை பிரபுதேவா திருமணம் செய்தார்.

எனினும் மனைவியை அவர் வெளியுலகுக்கு காட்டாமல் இருந்து வந்தார். தற்போது முதன்முறையாக அவரது இரண்டாவது மனைவி கன்னடத்தில் ஒரு நிகழ்ச்சியில் வீடியோவில் பேசியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

From Around the web