உண்மை முகத்தை காட்ட தொடங்கிய பிரதீப் ஆண்டனி..!

 
1

, 2017ஆம் ஆண்டு முதல் தமிழிலும் அறிமுகமானது பிக் பாஸ்.இதனை விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் முக்கிய ஷோவாக தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 7 போட்டியானது விஜய் டிவியில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய நடப்பு சீசன் மற்றும் முந்தைய ஆறு சீசன்களில் தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் இருக்கிறார்.

இந்த சீசனில் கூல் சுரேஷ், ஜோவிகா விஜயகுமார், பவா செல்லத்துரை, விசித்ரா, பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, நிக்சன், பிரதீப் ஆண்டனி, மாயா எஸ்.கிருஷ்ணா, சரவணா விக்ரம், அக்சயா உதயகுமார், விஷ்ணு விஜய், வினுஷா தேவி, மணிசந்திரா, விஜய் வர்மா, யுகேந்திரன் வாசுதேவன் என்று பங்கெடுத்துள்ளனர். இந்த பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு வீடுகள் பிரிக்கப்பட்டு ஷோ நடைபெறுகிறது.

நேற்றைய முதல்நாள் நிகழ்ச்சியில், இந்த வார கேப்டன் விஜய் வர்மா,லியோ படத்தின் பாடலான படாஸ் பற்றி சகப்போட்டியாளர்களிடம் பேசுகிறார். அதைப் பக்கத்தில் அமர்ந்து கேட்ட ரவீனா, அது கெட்ட வார்த்தைப்போல் இருக்கிறதே? என சந்தேகக் குரலுடன் கேட்க, அருகில் இருந்த பிரதீப் ஆண்டனி விஜய் வர்மாவிடம், கெட்ட வார்த்தை பேசிட்டீங்களா என கேட்கிறார்.

அதுபுரியாமல் விஜய் வர்மா, இல்லை என்று பேந்த பேந்த முழிக்கிறார். இதையடுத்து பேசிய பிரதீப் ஆண்டனி, “எனக்கு ஒரு ப்ளோவில் பேசும்போது கெட்ட வார்த்தைகள் வந்துவிடும். நீங்கள் இதனை தொடங்கி வைத்துவிட்டால் நானும் பேச ஆரம்பித்துவிடுவேன்” என்கிறார், சகஜமாக. இதைக் கண்டு சக ஹவுஸ் மேட்ஸ் ஷாக் ஆகின்றனர்.


 

From Around the web