ஆங்கிலத்திற்கு மாறிய ‘சூரரைப் போற்று’..!

 
ஆங்கிலத்திற்கு மாறிய ‘சூரரைப் போற்று’..!

கடந்தாண்டு தீபாவளிக்கு ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பலருடைய பாராட்டுக்களை பெற்ற படம் சூரரைப் போற்று. கொரோனா முதல் அலையால் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது.

எனினும் ஓ.டி.டியில் பார்த்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களால் முதன்முதலாக கொண்டாடப்பட்ட படம் என்கிற பெருமையை சூரரைப் போற்று பெற்றது. இந்த படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார்.

மேலும் இந்த படம் 2021-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இறுதிப் போட்டி வரை சென்ற இந்த படம், பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாமல் போனது. எனினும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ஆயத்தமாகி வருகிறது.

சர்வதேச வெளியீட்டை கருத்தில் கொண்டு  ‘சூரரைப் போற்று’ என்கிற தமிழ் டைட்டில் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்துள்ளனர் படக்குழுவினர். அதன்படி 'Praise the Brave' என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றாலும் ‘சூரரை போற்று’ என்றே பொருள்படும்.  துணிச்சலுக்கு துணிந்தவர்கள் சூரர் குலத்தினர் என்பது இதனுடைய பெயர் காரணம்.

From Around the web