தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி..!
 

 
விஷ்ணு மஞ்சுவுடன் பிரகாஷ் ராஜ்

தெலுங்கு திரைப்பட நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார். இதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் விதமாக வாக்குப்பதிவு நடந்தது.

பிரபல தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதிவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து பிரகாஷ் ராஜ் களம் கண்டார். இந்த தேர்தலில் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் உள்ளிட்ட நடிகர்களின் ஆதரவு பிரகாஷ் ராஜுக்கு இருந்தது.

தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் மொத்தமுள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்கு வாக்குரிமை உள்ளது. இதற்காக வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. மாலை வரை நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 655 ஓட்டுக்கள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் வாக்குப்பதிவில் கலந்துகொள்ளவில்லை. அதேபோல தெலுங்கு நடிகர் சங்கத்தில் வாக்களிக்கும் உரிமை வைத்துள்ள நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ஸ்ரேயா போன்றோரும் வாக்களிக்கவில்லை.

இந்நிலையில் இந்த தேர்தல் தொடர்பான முடிவுகள் உடனடியாக வெளியாகின. அதன்படி விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார். இதன்மூலம் 113 வாக்கு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சு வெற்றி அடைந்தார். 

From Around the web