பிரவினா பாக்யராஜை எப்போதுமே "பாவா பாவா" என்றுதான் கூப்பிடுவார் - பயில்வான் ஓபன் டாக்..! 

 
1

மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தந்திருந்த பேட்டியில் பிரபல டைரக்டர் பாக்யராஜ் திறமைகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. "பாக்யராஜ் சிறந்த இசையமைப்பாளர்.. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன் இவங்கெல்லாம் நாடகங்களிலிருந்து வந்தவர்கள். மணிவண்ணன் உடுமலையை சேர்ந்தவர்.. சிங்காநல்லூரை சேர்ந்தவர் பாக்யராஜ்.

அப்போதெல்லாம் வெளிமாநில நடிகைகள் அதிகமாக தமிழில் நடித்து வந்தார்கள்.. அவர்களுக்கு தமிழில் வசனம் கற்றுத்தர ஆட்கள் தேவைப்பட்டது.. அப்படி வசனம் சொல்லி தருவதில் பாக்யராஜ் சிறந்து விளங்கினார். அந்தவகையில்தான் தெலுங்கு மொழி பேசும் பிரவீனாவுக்கு தமிழ் வசனங்களை கற்று தந்தார் பாக்யராஜ். அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.. பிரவீனா இல்லையென்றால், பாக்யராஜ் இல்லை. படங்களை டைரக்ட் செய்ய வேண்டும் என்று பாக்யராஜிடம் சொல்லி உற்சாகப்படுத்தியதே பிரவீனாதான். 20 லட்சம், 30 லட்சம் இருந்தால்தான் ஒரு படம் அப்போதெல்லாம் எடுக்க முடியும். அதனால், பிரவீனாவே, ஒரு தயாரிப்பாளரையும் பாக்யராஜூக்கு அறிமுகப்படுத்தினார்.


பிரவினா, பாக்யராஜை எப்போதுமே "பாவா பாவா" என்றுதான் கூப்பிடுவார்.. நான் முந்தானை முடிச்சு பட வாய்ப்பு நடிக்க காரணமே பிரவீனாதான்.. அதை நான் மறக்கவே மாட்டேன்.. நான் பேச்சுலராக, லாட்ஜில் தங்கியிருந்தபோது, பிரவீனா எனக்கு போன் செய்து சொன்னபிறகுதான், ஏவிஎம் ஸ்டுடியோ செல்ல நேர்ந்தது.அதன்பிறகுதான், முருங்கைக்காய் வைக்கிற சீன், எனக்காக தரப்பட்டது. இந்த முருங்கைக்காய் வைக்கும் சீனுக்கு பாக்யராஜின் நண்பர்கள், தேனாம்பேட்டை நாடகர்கள் எல்லாம் போட்டி போட்டு கொண்டிருந்தார்கள்..


ஆனால் எனக்கு அந்த சீனை ஒதுக்கியதற்கு காரணமே பாக்யராஜ் மற்றும் பிரவீனாதான். அப்போது ஒரு படத்தின் "காப்பி ரைட்" வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அது தொடர்பாக சாதகமாக நான் அப்போது பத்திரிகைகளில் கட்டுரை எழுதினேன். அந்த நேரத்தில் அந்த வழக்கு வெற்றி பெற, அந்த கட்டுரையும் ஒரு காரணமாக இருந்தது. பிரவீனாவை பொறுத்தவரை யாரும் அவரை எளிதில் சந்தித்துவிட முடியாது. ஆனால், என்னை மாடிக்கு அழைத்து பேசி, ஆந்திராவிலுள்ள அவரது ஊரிலிருந்து வந்திருந்த மாம்பழங்களை எனக்கு தந்தார். ஒரு குடும்ப நண்பர் போலவே என்னிடம் பேசினார்.

முந்தானை முடிச்சு படத்திலேயே பூர்ணிமாவுடன் பாக்யராஜ்க்கு லிங்க் ஏற்பட்டது.. அதற்கு பிறகு டார்லிங் டார்லிங் டார்லிங் லிவிங் டூ கெதர் ரேஞ்சுக்கு வந்துவிட்டார்கள்.. அந்த நேரத்தில் பிரவீனாவுக்கும் உடம்பு சரியில்லாமல் போனது.. மன உளைச்சலும் ஏற்பட்டது.. மஞ்சள் காமாலை பாதித்து இறந்துவிட்டார். அந்த நேரத்தில் என்னன்னமோ கிசுகிசுக்கள் வந்தன. ஆனால், முதல்வர் எம்ஜிஆர்தான், பூர்ணிமா-பாக்யராஜூக்கு தாலி எடுத்து தந்து திருமணம் செய்து வைத்தார்.

From Around the web