‘கேப்டன்’ நினைவிடத்தில் பத்மபூஷன் விருதை வைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி..!!

 
1

மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதுகளுக்கு இம்முறை தமிழ்நாட்டை சேர்ந்த ஜாம்பவான்கள் தேர்வாகி இருந்தனர் அதில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தும் ஒருவர்.

கேப்டனின் மறைவகுக்கு பின் மத்திய அரசு இந்த உயரிய விருதை அறிவித்தது சற்று வருத்தமாக இருந்தாலும் இந்த உன்னத மனிதருக்கு இந்த விருது உரியது தான் என பலரும் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் வீரநடை போட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து சென்னை திரும்பிய பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார் .

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது :

கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததில் மகிழ்ச்சி; விருதினை அவரது நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினேன்; உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

மக்களுக்காக வாழ்ந்த கேப்டனுக்கு விருது வழங்கிய மத்திய அரசுக்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

From Around the web