ரஜினிக்காக காத்திருக்கும் பிரேமம் பட இயக்குநர்..!
பிரேமம் படம் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கட்டிப் போட்ட இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் ரஜினிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான ‘நேரம்’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக கால்பதித்தவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து இவர் இயக்கிய பிரேமம் படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய்பல்லி ஒரே இரவில் புகழின் உச்சிக்கு சென்றார்.
பிரேமம் படம் வெளியாகி 6 ஆண்டுகள் கழித்து தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார் அல்ஃபோன்ஸ். இந்த படத்தில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு ‘பாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் மலையாள ரசிகர்கள் உட்பட தமிழ் ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனிடம் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா? என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள அவர், ரஜினிகாந்துக்காக கதை ரெடியாக உள்ளது. பிரேமம் படத்தை தொடர்ந்து அவரை சந்திக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. ரஜினிகாந்த் என் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 - cini express.jpg)