பிரேம்ஜிக்கு விரைவில் டும் டும் டும்..! பொண்ணு யாரு தெரியுமா ?
May 31, 2024, 06:05 IST
பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் மற்றும் சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் பிரேம்ஜிக்கு பொருத்தமான மணமகளை கடந்த சில ஆண்டுகளாக தேடி வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி பிரேம்ஜிக்கு இந்து என்ற பெண்ணை பேசி முடித்து விட்டதாகவும் ஜூன் 9ஆம் தேதி பிரேம்ஜி - இந்து திருமணம் திருத்தணி முருகன் சன்னதிகள் நடைபெறும் என்றும் திருமண பத்திரிகை வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதனை அடுத்து 45 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி தற்போது திருமணம் செய்யப்போவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 - cini express.jpg)