அதுக்குள்ளே கர்வமா? நன்றி சொல்லவே தயங்கும் முத்துவின் முதல் பேட்டி..!
 

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முத்தகுமரன் முதல் முதலாக வழங்கிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. 

அதன்படி அதில் அவர் கூறுகையில், இரண்டு மூன்று நாட்களாகவே நன்றி சொல்வது எப்படி என்று யோசித்துக் கொண்டு இருக்கின்றேன். அதற்கு நன்றி என்ற வார்த்தையை தவிர வேறு அர்த்தம் அதற்கு தெரியவில்லை.

பிக்பாஸ் மேடையில் எனது தாய் எனது வெற்றியை  உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் நான் வெளியில் வந்து பார்த்தபோது என்னை ஒரு சகோதரனாக, நண்பனாக, வீட்டில் ஒருவராக அனைத்து மக்களும் என் எனது வெற்றியை கொண்டாடியது எனக்கு வியப்பாகவே காணப்படுகிறது. எதற்காக எனக்கு இவ்வளவு ஆதரவு என்று தெரியவில்லை.

இதன்போது ஜாக்குலின் பற்றி கேட்கையில், உண்மையாகவே ஜாக்குலின் பைனலில் இல்லாதது மிகப்பெரிய வேதனையாக இருந்தது. நான் பிக பாஸ் வந்த முதல் நாள் தான் ஆட்டத்தை ஆரம்பித்தேன். ஆனால் அவர் முதல் நொடியில் இருந்து ஆரம்பித்தார். 

இறுதியாக ஜாக்குலின் வெளியேறும் முன்பு கூட பயந்து நடுங்கவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை தைரியமாக விளையாடினார். அவரை பைனல் மேடையில் மிஸ் பண்ணியது ரொம்பவும் சங்கடமாக இருந்தது என்று தெரிவித்தார்.

மேலும் டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட்ட போதும் எல்லாரும் என்னை ஜெயிக்க வைத்திருக்கின்றார்கள் என்று நினைக்கவில்லை. எல்லாரும் என்னுடன் ஜெயித்து இருக்கார்கள்  என்றுதான் நினைத்தேன். மேலும்

அத்துடன், வெளியில் வந்த பார்த்தபோது எல்லோரும் எனக்காக சண்டை போட்டிருக்கின்றார்கள் என்ற விடயம் தெரிய வந்தது. நான் உள்ளே போட்ட சண்டையை விட வெளியில் எனக்காக சண்டை, போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்த நேரத்தில் நான் போட்ட உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பிக்பாஸ் டைட்டிலை ஏற்றுக் கொண்டேன் என தெரிவித்து உள்ளார்.

From Around the web