விரைவில் தயாராகும் கைதி 2- வெளியானது அறிவிப்பு..!
 

 
கைதி படம்

கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ படம் மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்றது. அப்போது கைதி 2 படம் தயாராகும் எனவும், அதை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்பதை உறுதி செய்தார் கதாநாயகன் கார்த்தி.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து கைதி 2 படத்திற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாஸ்டர் படம் வெளியான பிறகு அந்த சத்தம் அப்படியே ஒடுங்கியது. அந்த படத்தை தொடர்ந்து விக்ரம் பட பணிகளில் பிஸியானார் லோகேஷ் கனகராஜ்.

இதனால் தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், கைதி 2 குறித்த கேள்வி படக்குழுவை சுற்றி வந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ட்விட்டரில் நடைபெற்ற உரையாடலின் போது கைதி 2 படம் உருவாக்க பணிகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.

கைதி படத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முதல் பாகத்தை பின்பற்றியே இரண்டாம் பாகம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முந்தைய கதையில் கதாநாயகன் டில்லி-க்கும்  வில்லன் அடைக்கலத்திற்கு முன்னரே பழக்கம் இருந்தது போல காட்டப்பட்டு இருந்தது. அதனால் இதனுடைய இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

From Around the web