கைதி 2-ம் பாகத்துக்கு தடையா..? பட நிறுவனம் விளக்கம்

 
1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019-ல் திரைக்கு வந்த கைதி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள கொல்லம் நீதி மன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் என்பவர் கைதி படத்தின் கதை தன்னுடையது என்றும், நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து கைதி 2-ம் பாகத்தை உருவாக்க தடை விதித்ததுடன் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு விளக்கம் அளித்து கைதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான டீரீம் வாரியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி படத்தின் ரீமேக் மற்றும் 2-ம் பாகம் தயாரிக்க கேரள நீதிமன்றம் தடைவித்துள்ளதாக செய்தி ஊடங்கள் மூலம் அறிந்தோம்.

எங்களுக்கு அந்த வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல் தெரியாத காரணத்தால் அதை பற்றிய விவரம் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்பந்தமாக எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது.

From Around the web