ஹைதராபாத்தில் ‘ப்ரோ டேடி’க்கு பிள்ளையார் சுழி போட்ட ப்ரித்விராஜ்..!

 
ப்ரித்விராஜ் மற்றும் கல்யாணி ப்ரியதர்ஷன்

ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் ப்ரித்விராஜ் நடித்து இயக்கும் மோகன்லால் கதாநாயாகனாக நடிக்கும் ‘ப்ரோ டேடி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் வெளியான முதல் படம் ‘லூசிஃபர்’ கிரைம் த்ரில்லர் கதைபாணியில் உருவான இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகன். படத்தின் இயக்குநர் ப்ரித்விராஜூம் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது லூசிஃபர் படம் தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்லால் - ப்ரித்விராஜ் கூட்டணியின் உருவாகும் படம் ப்ரோ டேடி. இந்த படத்திலும் ப்ரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.

ப்ரோ டேடி ப்டாத்தில் கதாநாயகனாக மோகன்லாலும், கதாநாயகியாக மீனாவும் நடிக்கின்றன. முழுக்க முழுக்க காமெடிப் படமாக தயாராகும் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. 

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக அனுமதி கிடைக்காத நிலையில், ப்ரோ டேடி படத்தின் தொடக்கப் பணிகள் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சித்து வருகிறது.

From Around the web