ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ப்ரித்விராஜின் ஹிட் ரீமேக் படம்..!

 
பிரம்மம் படத்தில் ப்ரித்விராஜ்

மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

தமிழில் தயாராகும் இந்த படத்தின் ரீமேக்கில் பிரசாந்த் நடித்துள்ளார். அதேபோல தெலுங்கில் நிவின் உள்ளார். இந்த இரண்டு படங்களுக்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.

மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அந்தாதுன்’ ரீமேக் படத்தில் ப்ரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் மம்தா மோகன்தாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ‘பிரம்மம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, பிரித்விராஜின் ‘கோல்டு கேஸ்’, ’குருதி’ உள்ளிட்டப் படங்கள் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web