ப்ரியா அட்லியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

 
1

தமிழ் திரை உலகில் ’ராஜா ராணி’ ’தெறி’ ‘மெர்சல்’ ’பிகில்’ ஆகிய நான்கு படங்களை மட்டுமே இயக்கிய அட்லி அதன் பின்னர் பாலிவுட்டில் ’ ஜவான்’ என்ற படத்தை இயக்கினார். அவர் இயக்கிய ஐந்து படங்களும் வரிசையாக சூப்பர் ஹிட் படங்கள் என்பதால் அவர் தற்போது மிகப்பெரிய சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை கிருஷ்ண ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது அட்லி மற்றும் ப்ரியா அட்லி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் ப்ரியா அட்லி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் ப்ரியா அட்லியை பார்த்து கிளாமராகவும் முன்னணி நடிகைகளை விட அழகாகவும் இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அதில் ஒரு புகைப்படத்தில் அட்லி அந்தரத்தில் குதிப்பது போல் இருப்பதை பார்த்து ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ படத்தில் இடம்பெறும் காட்சியை போல் உள்ளது என்றும் கமெண்ட் பகுதியில் பதிவாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக் குவிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கும் திரைப்படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான கதை விவாதங்கள் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

From Around the web