அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை சினிமாவில் இன்னும் இருக்கதான் செய்கிறது - பிரியா பவானி சங்கர் !
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியா பவானி சங்கர். தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த அவர், ‘மேயாத மான்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது வெள்ளித்திரையில் நல்ல நிலைக்கு முன்னேறியுள்ள அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அகிலன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து பத்து தல, ருத்ரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையே சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது தலைவிரித்தாடி வருகிறது.
இது குறித்து பேசியுள்ள பிரியா பவானி சங்கர், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தப்போதும் சரி, சினிமாவிலும் சரி இதுவரை யாரும் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டது கிடையாது. மேலும் பேசிய அவர், எனக்கு பல நண்பர்கள் உள்ளனர். இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பிரச்சனைகள் எதுவும் எனக்கு நடந்ததில்லை. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது இருக்கதான் செய்கிறது. அதை நான் மறுக்கவே மாட்டேன் என்று கூறினார்.