பாய்ஸ் ஹாஸ்டலில் சிக்கிக்கொண்டு தவிக்கும் பிரியா பவானி..! ஹாஸ்டல் டீசர் ரிலீஸ்!

 
1

அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம்  ‘ஹாஸ்டல்’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்கிற படத்தின், ரீமேக்காக இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில வருடங்களாகவே இந்த படத்தின் ரீமேக் குறித்த தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தபோது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டீசரில் பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக அசோக்செல்வனுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கொடுக்கும் பிரியா பவானி சங்கர், ஹாஸ்டலுக்கு சென்றவுடன் செய்யும் கலாட்டாக்கள் தான் இந்த படத்தின் கலகலப்பான கதை என தெரிகிறது. ஆனால் திடீரென இந்த படம் திரில்லருக்கு மாறுவதுதான் படத்தின் டுவிஸ்ட் என்று தெரிகிறது.

‘ஹாஸ்டல்’ படத்தில்,  நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web