அடுத்ததாக விஷால் நடிக்கும் படத்தை கைப்பற்றிய ப்ரியா பவானிசங்கர்..!

 
1

அடங்க மறு படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் தங்கவேல். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார். பாக்ஸ் ஆஃப்ஸில் சராசரியான வசூலை இந்த படம் பதிவு செய்திருந்தது.

அதை தொடர்ந்து கார்த்திக் தங்கவேல் விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இது விஷாலின் 32-வது படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பது தொடர்பான தகவலை ப்ரியா பவானிசங்கர் தனது சமூகவலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். விஷால் 32 படத்தை ஃபைவ் ஸ்டார் ஃப்லிம்ஸ் சார்பில் கதிரேசன் என்பவர் தயாரிக்கிறார்.

இந்த படம் தொடர்பாக ரசிகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ப்ரியா பவானிசங்கர், உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி. எங்கள் படக்குழுவினர் (இயக்குநர் கார்த்தி, விஷால்) உட்பட பலர் மக்களின் பாதுகாப்பை மட்டுமே கவனம் கொள்கிறோம். விரைவில் இந்த படத்தில் நடிப்பது தொடர்பாக தயாரிப்பு தரப்பு உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ப்ரியா பவானிசங்கர் தற்போது குருதி ஆட்டம், பொம்மை மற்றும் ஹாஸ்டல் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹரி இயக்கும் அருண் விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியன் 2 மற்றும் பத்து தல போன்ற படங்களிலும் அவர் விரைவில் நடிக்கவுள்ளார்.
 

From Around the web