காதலரை பிரிந்துவிட்டாரா ப்ரியா பவானிசங்கர்..?

 
காதலர் ராஜவேல் உடன் ப்ரியா பவானிசங்கர்

கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வருபவரை நடிகை ப்ரியா பவானிசங்கர் பிரிந்துவிட்டதாக சமூகவலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை ப்ரியா பவானிசங்கர் சென்னையிலுள்ள பிரபல கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவராவார். அப்போது தன்னுடன் படித்த ராஜவேல் என்பவரை காதலிக்க தொடங்கினார்.

தொலைக்காட்சி தொகுப்பாளர், சின்னத்திரை நடிகை என்று படிப்படியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக தடம் பதித்துள்ளார் ப்ரியா பவானிசங்கர். 

அவருடைய காதலர் என்று சொல்லப்படும் ராஜவேல், ஆஸ்திரேலியாவிலுள்ள பிரபல எம்.என்.சி கம்பெனியின் மென்பொருள் பொறியாளராக உள்ளார். ப்ரியா பவானிசங்கர் வெற்றிகரமான கதாநாயகியாக இருந்த போதிலும் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் ப்ரியா பவானிசங்கர் இப்போது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மீம் பதிவிட்டுள்ளார். அதில் என்னுடைய வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று யாராவது சொன்னால், அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான் என்று வேடிக்கையான ஒரு மீம்மை பதிவிட்டுள்ளார்.

இதனால் நடிகை ப்ரியா பவானிசங்கரும் ராஜவேலும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எப்போதும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் ப்ரியா பவானிசங்கர், இந்த காதல் முறிவு குறித்தும் தகவல் பதிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web