வடிவேலு படத்தில் கதாநாயகியான ப்ரியா பவானிசங்கர்..?

 
வடிவேலு மற்றும் ப்ரியா பவானிசங்கர்
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் அதிகளவிலான படங்களில் நடித்து வரும் ஒரே நடிகையாக உள்ளார் ப்ரியா பவானிசங்கர். அவர் தற்போது பத்து தல, யானை, திருச்சிற்றம்பலம், குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே, ஹாஸ்டல் மற்றும் பொம்மை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவற்றுடன் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீண்டும் அந்த படத்துக்கான ஷூட்டிங் நடக்கும் போது, அதிலும் அவர் நடித்தாக வேண்டும்.

தற்போது இந்த வரிசையில் மேலும் ஒரு படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். சுராஜ் இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்த படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை ப்ரியா பவானிசங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web