பெரிய நடிகர் படத்தில் இணைந்த ப்ரியா பவானிசங்கர்..!
 

 
ப்ரியா பவானி சங்கர், திரைப்பட நடிகை

நடிகர் ஜெயம் ரவி அடுத்து நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி தற்போது ‘பொன்னியின் செல்வன், ஜன கன மன உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடுத்து இவர் கல்யாண் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் ‘பூலோகம்’ என்கிற படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். விமர்சனரீதியாக இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளது.

இன்னும் இப்படத்துக்கு தலைப்பு வைக்கவில்லை. பூலோகம் படம் வடசென்னை கலாச்சாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. அதுபோன்று இப்புதிய படமும் வடசென்னை பின்னணியில் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகியாக அவர் உள்ளார். ஹாஸ்டல், ஹரி இயக்கும் அருண் விஜய் படம், ருத்ரன், குருதி ஆட்டம், இந்தியன் 2, பத்து தல, இயக்குநர் சர்ஜுன் கே.எம் இயக்கும் படம் என வரிசையாக அவர் படங்களில் நடிக்கிறார்.
 

From Around the web