ஒரு பிரபல நடிகர் என்றும் பாராமல்- சதீஷை வைச்சு செய்யும் ப்ரியா பவானிசங்கர்..!
 

 
ஒரு பிரபல நடிகர் என்றும் பாராமல்- சதீஷை வைச்சு செய்யும் ப்ரியா பவானிசங்கர்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷை சகட்டுமேனிக்கு கலாய்த்து நடிகர் ப்ரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானிசங்கர். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது அவர் நடிப்பில் குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே போன்ற படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம், சிம்புவுடன் பத்து தல, கமல் - சங்கர் கூட்டணியின் உருவாகும் இந்தியன் 2 போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.


தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா பவானிசங்கர் காமெடி நடிகர் சதீஷின் நெருங்கி தோழியாக உள்ளார். இருவரும் ட்விட்டரில் தங்களை மாறி மாறி கலாய்துகொள்ளும் அளவுக்கு மிகவும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.

இந்நிலையில் சன்னி லியோனுக்கு ஜோடியாக நடிகர் சதீஷ் நடிப்பது குறித்து வெளியான செய்திக்கு சமூகவலைதளங்களில் பல்வேறு மீம்ஸுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றை தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ப்ரியா பவானிசங்கர் “என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு” பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரியா பவானிசங்கர் தமிழில் பதிவிட்டு நடிகர் சதீஷை காலாய்துள்ளது ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சதீஷை டேக் செய்து ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். 

From Around the web