செம்பருத்தி சீரியலில் இருந்து விலகினார் ப்ரியா ராமன்..!

 
ப்ரியா ராமன்

தொடருக்கு இருந்து வந்த வரவேற்பு குறைந்து வருவதை அடுத்து, செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகை ப்ரியா ராமன் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் டிவி சீரியல்களை டி.ஆர்.பி-யில் பின்னுக்கு தள்ளிய சீரியல் செம்பருத்தி. ப்ரியா ராமன், கார்த்தி, ஷபானா போன்றோவர்களை முக்கிய கதாபாத்திரமாக வைத்து ஒளிப்பரப்பான இந்த சீரியல் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றது. 

ஆனால் திடீரென ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் தொடரிலிருந்து விலகினார். அதை தொடர்ந்து அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். ஆனால் முன்னதாக கார்த்திக் - ஷபானாவிடம் இருந்த கெமிஸ்ட்ரி அக்னியிடம் எடுபடவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அதை தொடர்ந்து மேலும் சில முக்கிய நடிகர்கள் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டனர். தற்போது ப்ரியா ராமனும் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒரு மாத காலத்திற்கு முன்பாக அவருடைய கதாபாத்திரம் சிறைக்கு சென்றது போல காட்டப்பட்டது. 

அதோடு சரி அவர் மீண்டும் சீரியலுக்கு வரவில்லை. இதனால் அவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From Around the web