ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழ் படம் என்று கூறிய ப்ரியங்கா சோப்ரா..!!

ஆர்.ஆர்.ஆர் படத்தை ஒரு பாலிவுட் படம் என்று குறிப்பிட்ட நிகழ்ச்சி தொகுப்பாளரின் தவறை சுட்டிக்காட்டிய ப்ரியங்கா சோப்ரா, ஆர்.ஆர்.ஆர் படம் ஒரு தமிழ் திரைப்படம் என்று கூறினார்.
 
priyanka chopra

தற்போது இந்திய சினிமாவின் புது அடையாளமாக ஆர்.ஆர்.ஆர் படம் மாறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் எங்கு சென்றாலும், ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கின்றனர். அந்தளவுக்கு இந்த படத்தில் புகழ் மற்றும் பேர் பலரையும் கவர்ந்துள்ளது.

நடிகை ப்ரியங்கா சோப்ரா Armchair Expert with Dax Shepard பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கெற்றார். அப்போது தொகுப்பாளரான டேக்ஸ் ஷெஃபர்ட், ஆர்.ஆர்.ஆர் படத்தை பாலிவுட் படம் என்று தவறாக குறிப்பிட்டார். உடனடியாக அந்த தவறை திருத்திய ப்ரியங்கா சோப்ரா, உண்மையில் ஆர்.ஆர்.ஆர் படம் ஒரு தமிழ் படம் என்று அவரும் தவறாக கூறினார். 

rrr

உண்மையில் ஆர்.ஆர்.ஆர் ஒரு தெலுங்குப் படமாகும். தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு அந்த படம் வெளியானது. ஆர்.ஆர்.ஆர். இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த இப்படம், நடப்பாண்டில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.

From Around the web