பிக்பாஸ் இல்லத்தில் ப்ரியங்கா தேஷ்பாண்டே..!
 

 
ப்ரியங்கா தேஷ்பாண்டே

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் ப்ரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக பங்கெடுத்துள்ளார்.

பலரும் எதிர்பார்த்து வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 பிரமாண்டமாக துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் முதலாவதாக பாடகி இசைவாணியை போட்டியாளராக அறிமுகம் செய்து வைத்தார்.

அவரை தொடர்ந்து சின்னத்திரை நடிகர் ராஜூ, ஜெர்மனியைச் சேர்ந்த தமிழ் மாடல் மதுமிதா, அபிஷேக் ராஜா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். அவர்களுக்கு பிறகு விஜய் டிவி ப்ரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.
ஏற்கனவே அவர் பிக்பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக பங்கேற்க வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின. அது தற்போது உருவாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 போட்டியில் ப்ரியங்கா பங்கேற்றுள்ளதன் மூலம் அவருக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

From Around the web