பிக்பாஸ் போட்டியில் இருந்து ப்ரியங்கா வெளியேற்றம்..!

 
ப்ரியங்கா தேஷ்பாண்டே

பிக்பாஸ் போட்டியில் இருந்து ப்ரியங்கா தேஷ்பாண்டே வெளியேற்றப்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் பார்க்க தான் பொதுமக்கள் இல்லை. தொடர்ந்து டி.ஆர்.பி-யில் மிகவும் சரிவை இந்நிகழ்ச்சி சந்தித்து வருகிறது.

ப்ரோமோவை நம்பி நிகழ்ச்சியை பார்க்க துவங்கினாலும், பெரியளவில் சுவாரஸ்யம் இல்லை என்று ரசிகர்கள் பலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்த வாரத்துக்கான லக்ஸுரி பட்ஜெட் டாக்ஸ் நடைபெற்று வருகிறது. அதில் பிரியங்கா செய்த வேலையால் பொம்மை போட்டியில் இருந்து பிரியங்காவை வெளியேற்றுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார்.

அதற்கு ப்ரியங்கா ஓ.கே. என்பதுடன் நிகழ்ச்சி முடிவடைகிறது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து ப்ரியங்கா வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரியும்.

From Around the web