பிக்பாஸ் வீட்டுக்குள் ப்ரியங்கா..?

 
ப்ரியங்கா

விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளரான பிரியங்கா விரைவில் ஆரம்பம்பமாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தொலைக்காட்சி துறையில் இருக்கும் தொகுப்பாளர்கள் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை கொண்டவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவருடைய டைமிங் காமெடி  எளியோருக்கும் புரியக்கூடிய மொழிநடை, நகைச்சுவை உணர்வு போன்றவை தனித்துவமாக உள்ளது.

குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்துப்போன ப்ரியங்கா, விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியை கொடுத்தாலும் தொகுத்து வழங்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். மேலும் தனியாக யூ-ட்யூப் சேனலை ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். இதன்மூலமாகவும் அவருக்கான ரசிகர் வட்டம் விரிவடைந்துள்ளது.

தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் ஸ்டாராக இருக்கும் ப்ரியங்கா பிக்பாஸ் சீசன் 5-யில் போட்டியாளராக களமிறங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அதிகாரப்பூர்வ தரப்பில் இருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை.

எனினும் அவர் நிச்சயம் இடம்பெறுவார் என சிலர் அடித்து கூறுகின்றனர். கடந்த சீசனில் அறந்தாங்கி நிஷா இடம்பெற்றார். இதனால் பிக்பாஸ் வீட்டு நகைச்சுவை உணர்வுடன் இருந்தது. தற்போது அதே நிலைப்பாட்டுடன் ப்ரியங்காவை களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

From Around the web