சீதாராமம் சீரியலில் இருந்து விலகிய ப்ரியங்கா நல்காரி..!!

 
priyanka nalgari
புதியதாக துவங்கப்பட்ட தொடரில் இருந்து பிரபல சின்னத்திரை நடிகை ப்ரியங்கா விலகியுள்ள விவகாரம் தொலைக்காட்சி துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பெரும்பாலும் பெரியளவில் அறிமுகமில்லாத நடிகர்களை வைத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட தொடர் ‘சீதாராமம்’. கந்தசாமி என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில் ப்ரியங்கா மற்றும் ஜே இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரேஷ்மா, இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்கிய இந்த தொடர், டி.ஆர்.பி-யிலும் நல்ல ரேடிங்கை பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வந்த ப்ரியங்கா, திடீரென சீரயலில் இருந்து விலகியுள்ள செய்தி வெளியாகி பார்வையாலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் ப்ரியங்காவுக்கு திருமணம் நடந்தது.

அவருடைய கணவர் இனி சீரியலில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அதை ஏற்றுக்கொண்டு ப்ரியங்காவும் ‘சீதாராமம்’ தொடரில் இருந்து விலகியுள்ளார். விரைவில் அவர் கணவர் வசித்து வரும் மலேஷியாவுக்கு குடிபெயர்ந்து செட்டிலாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 

From Around the web