புனித் ராஜ்குமார் குடும்ப மருத்துவருக்கு ஏற்பட்ட சிக்கல்..!
Nov 10, 2021, 06:05 IST
சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமாக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் திடீரென காலமானார். அவருடைய மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன.
அவருடைய உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் சோகமடையச் செய்துள்ளது. அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் திரையுலகத்தினரை மேலும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
 - cini express.jpg)